குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து நிரூபிக்கிறார்.
கல்வி,வேலைவாய்ப்பு,பாரம்பரிய தொழில் வளம்,மதச் சார்பின்மை ஆகியவைகளிலிருந்து சாமானிய குஜராத் மக்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதும்,பிரித்தாளும் சூழ்ச்சியால் பெண்கள்,சிறுபான்மையினர் எவ்வாறு மைய நீரோட்டத்திலிருந்து விலகப்பட்டனர் என்பதையும்,
மனித வளக் குறியீட்டில் குஜராத் வெகுதூரம் பின் தங்கியுள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன்விவரிக்கிறார் அனில் குமார்.
குஜராத்தின் சாதாரண மக்களைக் கவனத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட்டுகளின் அடிவருடிகளாக
மோடியும்,பா.ஜ.க அரசும் செயல்பட்டதால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் முற்றிலும் தகர்க்கப்பெற்றதையும் இப்புத்தகம் விரிவாக நம்முடன் பேசுகிறது.