கூட்டாஞ்சோறு
நவீன அறிவியல் வளர்ச்சி
கிராமங்களை வளர்க்கப் பயன்படவில்லை.
மாறாக அழிக்க முனைகிறது.
வாழ்வியலைக் கற்பித்தக் கிராமங்கள்
இப்போது தொலைந்து விட்டன.
உலகம்தான் கிராமமாக வேண்டும்
என்பர்கள். ஆனால் இப்போது
கிராமம்தான் உலக மயமாயிருக்கிறது.
சந்தைமயம் மக்களை வெறும்
மந்தையாக மாற்றி நுகர்வுப்
பிராணிகளாக உருவாக்குகிறது.
வாழ்க்கையாளர்களை
வாடிக்கையாளர்களாக
வடிவமைக்கிறது.