கூடுசாலை:
நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல்பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எந்த்தக்க ‘ எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நட்த்தியவர், ‘ மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஆகச் சிறந்த ஒன்பது கதைகளின் தொகுப்பே இந்நூல். இன்றைக்கும் வாசிப்பிற்க்கு உகந்த்தாக இருப்பதோடு பெரும் கதை சொல்லி அவர் என்பதை உனர்த்துபவை இக்கதைகள். மாடுகள் தொடர்பாக இத்தனை விவரங்களோடும் துல்லியத்தோடும் இவரளவுக்கு எழுதியவர்கள் இல்லை. வேளான் வாழ்வில் மாடுகள் செல்வமாக கருதப்பட்டமைக்கு இக்கதைகள் அறிய சான்றுகள் மாடுகளை மையமாக வைத்து மனித உறவுகளையும் மனநிலைகளையும் செயல்பட்ட விசீகரங்களீவரது கதைகள் காட்டுகின்றன. அத்துடன் கிராமத்துக் திண்ணைப் பேச்சுத்தன்மையிலும் அமைந்த மொழியை உத்தியாகவே கொண்டு எழுதியவர் அவர். மாடுகளைப் பர்றியல்லாமல் ஏற்க்கனவே கவனம் பெற்ற கதைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு சிறுகதை வரலாற்றில் சி.சு.செல்லப்பாவின் இட்த்தையும் உறுதிப்படுத்துகிறது.