காட்டில் ஒரு மான்
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்துவருகிறது. சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் காலபூர்வமான வெளிபாடுகளாகக் கருதப்படுகின்றன.
அம்பை, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்