கதை சொல்வதும்;கதை கேட்பதும் பொழுது போக்கவோ,துக்கம் வரச் செய்யவோ அல்ல.உணர்வுகளைக் கடத்தவும்,அன்பப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி.பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராக பயணிக்கின்றன.பாட்டி,வரை என்ற இடண்டு சொற்கள் போதும்.உங்களுக்கு ஒரு கதையை நினைவூட்டுவதற்கு.பெரிய வானத்தை,அடர்ந்த வனத்தை உங்கள் வீட்டுக்குள் கொண்டு வர கதைகளால் மட்டுமே முடியும்.பால்யத்தில் கேட்கும் கதைகளையும் அந்தக் கதை சொன்னவரின் முகக் குறிப்புகளையும் குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்.