எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக் கட்டுக்குள் வைக்கும் மாயக் கயிறுகளை அறுப்பதே இப்படைப்புகளின் நோக்கம். இவ்வகையில் ஆன்மிக உணர்வில் சஞ்சரித்து அதன் விளைவுகளை நேர்நின்று கலையுணர்வாய்ப் பிரதிபலிக்கிறார் மலர்வதி.<o:p></o:p>
- களந்தை பீர்முகம்மது