....ஆண்,பெண்-இளம்பருவம்,முதிர் பருவம்-மனிதன்,பறவை,விலங்கு,காடு,மலை,கடல்,ஆறு போன்ற இயற்கையின் பரிணாமத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும்,அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள சமூக அமைப்பை பற்றியும் கவலைப்பட வேண்டியதன் அவசியமே மார்க்சியத்தின் தேவையை அதிகரித்திருக்கிறது.பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்னும் நிலையை கடந்து மேற்சொன்ன அனைத்துக்குமான தத்துவம் என்னும் நிலைக்கு மார்க்சியம் சென்று விட்டதற்கும் காரணம் முதலாளியத்தின் இலாப வெறியே....
....சமூக நெருக்கடிகள் அறிவின் தொடக்கநிலைப் பாடங்களாகப் படிக்கப்பட வேண்டும்.மார்க்சைப் பற்றிக் கற்றுக் கொள்வதை,கற்றுக் கொடுப்பதை இதற்கான முதற்படியாகக் கொள்ள முடியும்.இதை ரியுஸ் எழுதிய எளிய அறிமுக நூலில் இருந்தும் தொடங்கலாம்.
மனித மூளையின் பரிணாமம் பற்றிய ஆய்வுகளும் புரிதல்களும் அது சமூகத்தின் விளை பொருள் என்பதை மெய்ப்பிக்கின்றன.மார்க்சின்,மார்க்சியத்தின் மாபெரும் இன்றைய பொருத்தப்பாடு இத்தகைய கண்ணோட்டத்துடன் இணைக்கப்பட்டு புரிந்துகொள்ளப் படவேண்டும்....