கரிசல் காட்டுக் கதைகள்
நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுருக்கிறார் பெரியவர் ஆர்.எஸ்.ஜேக்கப். சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்தவர், ஏழை எளிய, உழைக்கும் வர்க்கச் சிறார்களின் கல்விக் கந்திறந்து, அறிவுத் தீபம் ஏற்ற அயராது பாடுபட்டிருக்கிறார், அதுவும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில்! கற்பனைக் கதாநாயகர்களை விஞ்சும் நிஜக் கதாநாயகர் இவர் என்பதை உணரும்போது, இவரை ஆண் தெரசா என்றே மதிக்கத் தோன்றுகிறது.
குறுகத் தரித்த குறள் மாதிரி இவர் எழுதியுள்ள ஒவ்வோரு குட்டிக் கதை பற்றியும் பல பக்கங்களில் பாராட்டி எழுதலாம். அவ்வளவு சிறப்புகள் உள்ளன. இந்த ஒரு நூலுக்காகவே பெரியவர் ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள், சாகித்ய அகாடமி பரிசால் கவுரவிக்கப் பட வேண்டியவர் என்பது என் கருத்து.
-கெள்தம நீலாம்பரன்