திசையளந்து பேசும் அத்திரு மேனியில் வளர்ந்த இருகரத்தில் ஒன்று வான் அளக்கும் அடுத்த கரம் அந்த வானத்தைப் பற்றி மண்ணுக்குக் கொண்டு வந்துசேர்க்கும்.அந்த நிலை கண்டு மீண்டும் நெடியோனே மானிடனாய்த் தமிழகத்தில் பிறந்து வில்லுக்குப் பதிலாகச் சொல் கொண்டு வந்தானோ என்று வியக்க வைக்கும்.கம்பனாகவும்,பாரதியாகவும்,இடையிடை வள்ளுவனாகவும்,இளங்கோவாகவும்,எண்ணிலா உலகக் கவிகள் மொத்தமாய்த் தமிழகத்தில் வந்து குதித்ததைப் போலவும் ஒரு தோற்றத்தைக் கொண்டுவந்து நிறுத்தினால்,அதன் பெயர் ஜீவா.