உலகத் திரைப்பட ரசிகர்களால் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்பட்டவர் சர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், கலையிலும் வாழ்க்கையிலும்
இணையற்ற ஆளுமை.
அவர் திரைப்படங்களாகத் தயாரித்து இயக்கிய இந்தக் கதைகள் குற்றங்களும் மர்மங்களும் நிறைந்த மனித மனப் புதரின் திகைப்பூட்டும் பக்கங்கள்
சாதாரண மனிதர்களிடம் இருக்கும் குற்ற இயல்பும் அதன் பரிணாம வினைவுகளும் இந்தக் கதைகளின் பொதுத்தளங்கள். அவற்றில் வீட்டுச் சூழலில்
நடக்கும் குற்றங்கள். அவை ஏற்படுத்தும் திகில், எதிர்பாராத முடிவு ஆகியவை நிகழ்ச்சிப் போக்குகளாக அமைந்திருக்கின்றன. குற்றங்கள் ஏதுமற்ற
விறுவிறுப்பான கதைகளும் உண்டு.