2011 - 14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புல்ம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
நவீனத்துவம் என்கிற உலக இலக்கியங்கள் பயணித்த பாதையில் ஷோபாசக்தி முன் வைக்கும் கதைகள். இனவுரிமை ,முழக்கங்களையெழுப்பி தன்னை முன்னிறுத்திக் கொண்ட எந்தவொரு அரசியல், இலக்கியம் பதிவு செய்யாது நழுவிக் கொண்ட மனித வாழ்வை சித்திரங்களாய் கொண்டிருப்பவை. ஆன்மாவை பறித்துக் கொண்டு அம்மணத்தை பரிசளித்த இயக்கப் பெருமிதங்களை குலைத்த ரூபங்கள், கற்பு,ஆன்மை,போன்ற தேச தேசிய தமிழ் ஜம்பங்களை விட்டு விலகி பயனிப்பவை.