ஈழத்தை அவன் ’சிங்களத்தீவு’ என்று பாடிவிட்டதற்காகப் பகைப்பவர்கள் சிலர்.
வடமொழியை அவன் வாழ்த்தியதற்காக வசைபாடுபவர்கள் சிலர்.
வருணப் பகுப்பை அவன் வரவேற்றதற்காக விமர்சிப்பவர்கள் சிலர்.
வன்முறையை அவன் ஏற்காததால் ’பூர்ஷ்வா’ என்று சித்தரிப்போர் சிலர்.
கட்டற்ற விடுதலைக் காதலை மறுத்தால் கண்டிக்கும் பெண்ணியவாதிகள் சிலர்.
பாரதியின் சில கொள்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை. மாறிவரும் சமூகப் போக்கில் எந்தக் கருத்தும் விமர்சனத்துக்குரியதே.
ஆனால், அவன் மீது சாதிச் சாயம் பூசுவதில் எனக்குச் சம்மதமில்லை. அவன் காலத்தில் அவனளவு முற்போக்காய் சிந்தித்தவன் எவனுமில்லை என்பதுதானேசரித்திரம்.