என் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித்தனங்களுக்கு இடமே இல்லை, உணர்வுய்கள் நெகிழ்ந்து நெக்குருக்குவனவாகவும் அசட்டுத்தனமாகவும், கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான்.உணர்வுகள் பகடை உருட்டா. தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது. தரையில் விழுகிற மழைத்தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும். ஆனால், உடனடியாக உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும். எழுத்தும் தரை நனைக்கத்தான்.