இலக்கிய உலகின் சிகரங்களைத் தொட்டவர் ஜிப்ரான்.தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால்,காலத்தை வெல்லும் சொல்லோவியங்களைப் படைத்தளித்தார்.
கவிஞராய்,கட்டுரையாளராய்,கதாசிரியராய்,நாவலாசிரியராய்,ஓவியராய்,சிற்பியாய்,நாடகாசிரியராய்ப் பண்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல் விசாலமானது.அவரது சமுதாயப் பார்வை தெளிவானது;திட்டவட்டமானது;உறுதியானது.
‘சாத்தானும் பைபிளை மேற்கோள் காட்டக்கூடும்’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.ஜிப்ரானின் இலக்கிய உலகில் சாத்தான் மகாஞானம் பேசுகிறது!அந்த ஞானம்,மகான்களின் ஞானங்களையெல்லாம் விழுங்கி சீரணித்து வொடுகிறது!பைபிளுக்குப் பேருரை விளக்கம் அளிக்கிறது!மத விருட்சத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கிறது!கடவுளின் மீது புதிய வாசம் வீசுகிறது!சாத்தானின் ஞானங்களையெல்லாம் விழுங்கி சீரணித்து வொடுகிறது!பைபிளுக்குப் பேருரை விளக்கம் அளிக்கிறது.