தன் படைப்பளவில் அவன் எழுத்தாளன். மற்றபடி அவன் சக மனிதன். சமூகக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் புழுங்கும் சாதாரணத்திலும் சாதாரணமானவன். அவன் எழுதிய எழுத்துக்களை வாசிக்காமலும், அவனைப் புரிந்து கொள்ளாமலும் சமூகக் கேள்விகளால் குடைந்து அவனிடமிருந்து விடைகாண முயன்றால் விடைகள் விசித்திரமாக இருக்கும். தொடர்ந்து எழுத்தாளனைப் புறக்கணிக்க சமூகக் கேள்விகளை அவன்மீது திணிக்கலாம். நேசம் கொள்ள வேண்டுமெனின் அவனின் உன்னதப் படைப்புகளை வாசிக்கலாம்.