அவசரத்துக்கு உபயோகம் ஆகும் ‘சேஃப்ட்டி பின்’களை அதன் கண்டுபிடிப்பாளர் தன் அவசரப் பணத் தேவைக்காகத்தான் கண்டுபிடித்தார்.19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ‘வால்டர் ஹண்ட்’ என்கிற மெக்கானிக்,நண்பரிடம் வாங்கிய 15 டாலர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க,ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உருவாக்கியதுதான் சேஃப்டி பின்.
இளவட்டக் கல்லைத் தூக்கப் போகிறவர்களுக்கு கருப்பட்டியில் பலகாரங்கள் செய்து கொடுப்பார்களாம்.ஆனால்,இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் இளைஞர்களால் அந்தக் கல்லை உருட்டவாவது முடியுமா என்பது தெரியவில்லை.இன்றும் சில கிராமங்களில் நமது வரலாற்றைப் போலவே மண்ணில் புதைந்துகிடக்கின்றன இந்த இளந்தாரி கற்கள்.
‘ஜிங் சா...ஜிங் சா’ எனக் கைதட்டும் பொம்மையுடன் மூங்கில் கொம்பு,அதில் கெட்டியாக ஒட்ட வைத்திருக்கும் மிட்டாய்,வியாபாரியின் விரல்கள் வழியே வேண்டிய உருவத்துக்கு மாறும் மாயாஜாலம்...இதுதான் ‘வாட்ச் மிட்டாய்’! சிறுவர்களின் ஆசைக்கு ஏற்ப வாட்ச்,விமானம்,பைக்,மயில்... என கண் எதிரிலேயே கலை நயத்துடன் வடிவம் எடுக்கும்.இந்த மிட்டாய்கள்,இன்று கிட்டதட்ட வழக்கொழிந்துவிட்டன.