இந்திய அளவில் வேறெந்த ஊடகமும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை இத்தனை விவரங்களுடன் வெளியிட்டதில்லை,நக்கீரன் மட்டுமே செய்தது என்பதைத் தம்பிகளின் செயல்பாட்டின் மூலம் சொல்ல முடியும்.
இந்த வழக்கைப் பற்றிய விவரங்களை நேரில் பார்த்து முழுமையாக அறிந்தவரான தம்பி பிரகாஷ் ஆயிரம் பக்கங்களுக்கு மேலான தீர்ப்பு விவரங்களை தமிழில் மொழி பெயர்த்து எழுதினார்.சந்தேகங்கள் எழக்கூடிய இடங்களில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறவும் தவறவில்லை.ஜனநாயக நாட்டில் யாரும் மகாராணிகள் அல்ல.எல்லோரும் குடிமக்கள்தான்.சட்டத்தின் சந்துபொந்துகளை வைத்துக்கொண்டு நீதியை எல்லாக் காலத்திலும் ஏமாற்றிவிடமுடியாது.தவறு செய்தவர்களுக்கு நிச்சயமாக ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும் என்பதை நிரூபித்த சொத்துக் குவிப்பு வழக்கின் மகத்தானத் தீர்ப்பை தமிழக மக்கள் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆவணத்தைப் பெருமையுடன் வெளியிடுகிறது நக்கீரன்.