இயக்குநர் சிகரம் கே.பி
திரையுலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்.இயக்குநர் சிகரம் என்று போற்றப்பபட்டவர்.
தமிழ் மேடை நாடக உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொண்டவர். தனது 80வது வயதுகளிலும் மேடை நாடகம் எழுதி,அதன் அரங்கேற்ற நிகழ்ச்சியில், அதன் வெற்றிக்காக மேடையில் இங்கும் அங்கும் அலைந்து நடிகர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தவர்.
இவரது பல படங்கள் சர்ச்சைக்கு உள்ளானவை. ஆனாலும் பாராட்டப்பட்டவை. யாருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். ஆகவேதான் கடைசிவரை வெற்றி அன்னை அவரை விட்டு விலகவில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பெசாதவர்.
கதாநாயகர்களையே மையமாக வைத்து,கதாநாயகிகளை ஊறுகாயைப்போலக் காட்டிவந்த வெள்ளித்திரையில்,பெண்களை மையப்படுத்திய கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கான இயக்குநர்களில் ஒருவர்.
இவரைப் பற்றி, இவர் திரைப்படங்கள் பற்றி ஒரு டைரிக்குறிப்பு போல புத்தகம் வெளியிட்டால் என்ன? என்ற எண்ணத்தின் வடிகாலே இந்நூல் எனலாம்.