பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லன்,குணச்சித்திர நடிகன்,நகைச்சுவை கதாநாயகன் என்ற நடித்த காலகட்டம், எஸ்.பி.முத்துராமனால் ஆக்ஷன் ஹீரோவாக வளர்த்தெடுக்கப்பட்ட காலகட்டம்,ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்டு எம்.ஜி.ஆர்.போல் அரசியல் ஏய்ப்பு வசனங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு வெறும் சாகச நடிகராக வலம் வரும் காலகட்டம் என ரஜினியின் நான்காவது காலகட்டத்தில் வெளியான படங்களின் விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிக ஹைப்புடன் உருவாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்துப் படங்களின் பலங்கள் பலவீனங்கள் சுட்டிகாட்டப்பட்டிருப்பதோடு பலவீனங்களையும் வழிமுறையும் மாற்றுத் திரைக்கதை மூலமாக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.ஒரு படைப்பாளியின் சுதந்தரத்தில் குறுக்கிடும் செஉயல் அது... ஒரு படைப்பாளிக்கு எப்படி வேண்டுமானாலும் படைக்க சுதந்தரம் வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.தேயிலை தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த ஒரு மருத்துவரை கோமாளியாகவும் ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் உரிமைக்குப் போராடிய ஒருவரை கேங்ஸ்டராகவும் சித்தரிக்கும் சுதந்தரம் ஒரு ‘கலைஞனு’க்கு உண்டென்றால் உண்மைக்கு நெருக்கமாகவும் கலை அழகுடனும் உன் படத்தை எடுத்திருக்க வேண்டியதுதானே என்று கேட்கும் சுதஎதரமும் ஒரு விமர்சகனுக்கு உண்டுதானே..?இந்தக் கேள்வியில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்ளமுடிந்தவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது..