சரவண கார்த்திகேயனின் இக்கதைகள் ஓர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம்.அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்கங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சுபவையுமாக உள்ளன.இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன.வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது.