நவீன அறிவியல் என்பதே மேற்குலகச்சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது,எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைக்கிறர்கள்.இன்று நம்முடைய கல்வி நிலையங்களில் மேற்கத்திய அறிதல் முறைகளின் அடிப்படையிலேதான் அறிவியலை அணுகவும் புரிந்துகொள்ளவும் சொல்லித்தரப்படுகிறது.ஆனால் இந்திய அறிதல் முறைகளுக்கும் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கும் நீண்ட நெடிய தொடர்புகள் உள்ளன.