ஒ.என்.வி. என அன்புடன் அழைக்கப்படும் கவிஞர் குறுப்பு மலையாள மொழியின் புகழ்மிக்க கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார் இருபத்தொரு
கவிதை நூல்களின் ஆசிரியான இவர் 2007 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது பெற்றவர், 1998 இல் பத்மஸ்ரீ விருதும், 2011 இல் பத்ம விபூஷண் விருதும்
இந்திய அரசால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன மத்திய மாநில சாகித்திய அகாதெமிகளின் விருதுகள் இரண்டையும் தம் கவிதை நூல்களாகப் பெற்றவர்.
இடதுசாரிக் கவிஞர் என் அறியப்படும் குறுப்பு தில்லி சாகித்திய அகாதெமி செயற்குழு உறுப்பினராகவும் கேரள கலாமண்டலத் தலைவராகவும்
விளங்கியவர். பன்னாட்டுக் கவியரங்குகளில் பங்கு பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கவிஞரும் மொழிபெயர்பாளருமான சிற்பி படைப்பிலக்கியத்துக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது
பெற்றவர். மலையாள மொழியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, ராஜா சர் முத்தையா
விருது உட்படப் பல விருதுகள் இவருக்கு வழ்ங்கப்பட்டுள்ளன.
சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் ( 1993 - 1998 ) செயற்குழு உறுப்பினராகவும் ( 2008 - 2012) விளங்கியவர்
அறுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் சிற்பி அற்க்கட்டளை நிறுவிக் கவிஞர்களுக்குப் பரிசுகளை வழங்கி வருகிறார்.
ஒ.என்.வி குறுப்பின் தேர்ந்தெடுத்த கவிதைகளைச் சாகித்திய அகாதெமிக்காக் ஆங்கிலத்தில் பதிப்பித்து வெளியிட்டவர்
ஏ.ஜெ.தாமஸ். அதன் மொழிபெயர்ப்பு இந்நூல்.