ஆய்வுகளில் முதன் முதலாகக் குறுந்தொகையில் மடலேறுதலும்,நற்றிணையின் நெஞ்சோடு கிளைத்தலும்,உளவியல் பார்வைக்கு உள்ளாக்கப் பெற்றுள்ளன.யுங்கின் உளப் பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றின் வஞ்சினம் மொழிதல் அலசப் பெற்றுள்ளது;உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கனவுக் கொள்கையுடன் இலக்கியக் கனவுகள் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளன.பேரறிஞர் அண்ணா,புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் ஆளுமைப் பண்புகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆல்ஃபிரட் அட்லர்,கேரன் ஆர்ன்,எரிக் எச்.எரிக்கன் போன்ற உளவியல் அறிஞர்களின் கோட்பாடுகள் இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளன.