குரிஞ்சியில் பிற இடங்களை விடவும் பயிரினங்கள் மிகுதி, அவரை, ஆம்பல், உளுந்து, சேம்பு, திணை, மூங்கில், மா, பலா, நெல்,வாழை, மிளகு என இப்படியாகப் பயிர்களுக்குப் பஞ்சம் இல்லை.
குறிஞ்சி நிலம் உழவர் உழாமலேயே நிறையப் பயன் தந்தது. வெண் நெல்,பலா, வள்ளிக் கிழங்கு, தேன் முதலியன இயற்க்கை வழியில் எளிதாகக் கிடைத்தன. நெல் அரிசியை ஆம்பல் மலரோடு அவியலாக்கி உண்டனர்.