இந்து புராணமே பிரமிக்க தக்க கடவுள்கள், தேவியர், மற்றும் கதாபாத்திரங்கள் மிக்கது; காலண்டர் ஆர்ட் அவற்றை உயிர் ஓவியங்களாக வண்ணக் கலவைகளில் தந்துள்ளது. இந்த காலண்டர் ஆர்ட் ஒரு வேளை அதீத விநோதமாகவும் முறை பிறழ்ந்தும் காணப்படுவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையாகவே ஒரு காலத்தில் கோவில் சுவர்களிலும் ஓலைச் சுவடிகளிலும் மட்டுமே காணப்பட்ட புராணப் படைப்புகளை, ஜனநாயக உணர்வோடு இது வெளிப்படுத்துகிறது.