அஜித் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் ஒரு காமெடி சீன் வரும்.
விவேக்கும் பாலாஜியும் நடித்த அந்தக் காட்சியில், தனக்கு காது கேட்காது, கண்பார்வை இல்லை, மூலம், கைகள் வராது என்று வரிசையாய் நோய்களை அடுக்குவார். இந்த எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டும் என்று பாலாஜி கேட்பார்.
அதற்கு பூச்சி மருந்துதான் சரியான வழி என்று விவேக் கூறுவார்.
அந்த வழியில் இந்தியப் பிரதமர் மோடி இந்திய மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து ஜிஎஸ்டி என்று சொல்கிற லெவலுக்கு போய்விட்டார். ஆனால், அது நோய் தீர்க்கும் மருந்தா, உயிர்கொல்லி மருந்தா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுனர்கள்.