காட்ஃபாதர்
இந்த நூலை வாசிப்பது மகத்தான இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்படநூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனிதவாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நம்க்கு வாய்ப்புள்ளது. திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் இந்நூலை வாசிக்கும் போது நம்க்கு விளங்கும். மேலும் சிலர் இப்படத்தை நூறுமுறை பார்த்திருக்கக் கூடும். ஆனால் இதனை நூலாக வாசிக்கும் போது இப்படம் மேலும் பல விஷயங்களுடன் நமக்குள் புதிய அனுபவத்தை விரிவு கொள்ளச்செய்யும் என்பது உறுதி. தமிழ் திரைப்பட சூழலும், திரைக்கதை பயில்பவர்களுக்கும், உலகசினிமா ரசிகர்களுக்கும், இல்க்கியவாதிகளுக்கும் நாதன் பதிப்பகத்தின் மகத்தானபரிசு இந்நூல்.
- அஜயன் பாலா