காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
ஒரு போராளியாக வன்முறை, அநீதி ஆகியவற்றை அவர் எதிர்கொண்ட விதம் உலகம் அதுவரை அறியாத ஒன்று. அமரத்தன்மை பெற்ற அவருடைய வாழ்க்கையின் இறுதி 200 நாட்கள் பல பேருண்மைகளை உணர்த்துவன.
1947 ஆகஸ்ட் 15, நாட்டின் விடுதலைத் திருநாள் அன்று காந்திஜி எங்கிருந்தார்? யாருடன் இருந்தார்? புதுதில்லியின மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கு அப்பால், வெகுதொலைவின் கல்கத்தாவின் தென்கோடியிலுள்ள பெலியகட்டாவில் ஹைதாரி மாளிகையில் இருந்தார்.
வன்முறைக் களமான அப்பகுதியில் பாதிக்கபட்ட மக்களுடன் இருந்தார். அவருடைய வாழ்நாட்பணி, அமைதிப்பணி அன்றும் தொடர்ந்தது. மனிதக்குலத்துக்கு மீண்டும் நம்பிக்கை ஊட்டியது.
இந்த நாட்களில், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், குமரப்பா, ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, ஜெயப்பிரகாஷ், நாராயண், ராம்மனோகர் லோஹியா, கமலாதேவி, பேகம் அப்துல்லா, மவுண்ட்பேட்டன், சர் சி.பி., சோஷலிஸ்டுகள் எனப் பலரையும் எதிர்கொண்டார்.
ஏகாதிபத்தியம், வன்முறை, மதம், வகுப்புவாதம், மதவெறி, வகுப்புக் கலவரங்கள், வினை, எதிர்வினை, இலக்கு, அதை அடையும் வழி, அவற்றின் தன்மை எனப் பலவற்றையும் பற்றி அவர் பேசினார்.
“என்னுடைய வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி” என அவரால்தான் கூறமுடிந்தது. இந்நூலில் காந்திஜியின் கடைசி 200 நாட்கள் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பணியை அறிஞர் வி.ராமமூர்த்தி மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்துள்ளார். இக்கட்டுரைகள் THE HINDU நாளிதழில் தொடராக வந்து பின்னர் நூலாக வெளிவந்தது. இதனைச் கி.இலக்குவன் சிற்ப்பாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.