கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்பட்டிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம் என்றும் காதலை மனித இனக் கலாச்சார வளர்ச்சியின் விளைபொருள் என்றும் வைத்துக்கொண்டால் முன்னதை உடலுக்கும் பின்னதை மனதிற்கும் இணை வைக்க முடியும். எனில் உடலை இயற்கையின் சிருஷ்டி என்றும் மனதை சமூகத்தின் கண்டுபிடிப்பு என்றும் பொருள்கொள்ள, முருகனின் கதைகள் ஏன் இயல்பாகவே காம வயப்படுமளவிற்குக் காதல் வயப்படுவதில்லையென்பது விளங்கும். - பா.வெங்கடேசன்