அதிஷாவின் உரைநடை..வாசிப்பதற்கு இலகுவாகவும் எளிமையாகவும் இருக்கிற அவருடைய மொழி படிக்கிறவனை சுலபத்தில் ஈர்க்கிறது. அனாவசிய அலங்காரங்கள் இல்லாத அதே நேரம் கதைக்குத் தேவையான அழுத்தத்தை தரத் தவறவில்லை. இவ்விதமான உரைநடை தற்போது வாசிக்கத் துவங்கும் இளம் தலைமுறையை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் நிலை நிறுத்துவதற்கு அவசியமானது என்று கருதுகிறேன்.
அது மட்டுமல்லாது வாசிப்பவனுக்கு சுவாரஸ்யத்தையும் இந்த நடை வழங்குகிறது. அதிஷாவின் கதைகளில் நிறையக் குழந்தைகள் இடம் பெறுகிறார்கள். குழந்தைகளின் உலகத்தையும் நடவடிக்கைகளையும் குழந்தைகளின் மொழியையும் மனப் போக்கையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதற்காக அதிஷாவை பாராட்டியே ஆக வேண்டும். -
-எழுத்தாளர் பாஸ்கர் சக்தி