நாம் இன்னும் பிள்ளைப் பூச்சிகள்தான்.மௌன சாட்சிகள் தான்.எதைக் கண்டு கொதித்து என்ன செய்தோம் நாம்.முணு முணுத்து விட்டு தூங்கப் போய் விடுகிறோம்
அவ்வளவுதான்.உதாரணத்திற்கு எத்தனை சாதிக்கலவரங்கள் எவ்வளவு கொடுமைகள்!காரியமாக என்ன செய்தோம் நாம்?ஒரு தடவை பத்து பேர் கூடி fact finding committee என்று தெற்கே போனோம்.போய்விட்டு வந்து,நாமே எழுதி நாமே படித்துக்கொள்ளும் சிறு பத்திரிக்கைகளில் அச்சிட்டு திருப்தி பட்டுக்கொண்டோம்.நமக்கு அப்பால்,இந்த மொத்த சமூகத்தின் எத்தனை விழுக்காட்டைப் போய் நமது கண்டுபிடிப்பு தொட்டது?ஆதிக்கச் சாதிகளை அவர்கள் ஆதரவாளர்களை,அரசை,எவ்வளவு அசைத்தது அது?நாம் நஞ்சாக வெறுக்கும் காரியங்கள் நம் கண் முன்னையே நம்மைக் கொக்கணி செய்துகொண்டே கடந்து போகின்றன.நம் பங்கில் எதோ தவறு நடக்கிறது அதைக் கண்டாகவேண்டும் நாம்.