மனித மனத்தின் இருண்ட பக்கங்களை தனது புன்னகையின் மூல விளக்கேற்றி வைத்தவர் சார்லி சாப்ளின். அவரது திரைப்படங்கள் யாவும் அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவற்றின் ஒளிபரப்பில் படமாக்கப் பட்டவை.
மனிதனின் துயரங்களை மாற்றுகின்ற மிகச்சிறந்த வலிநிவாரணி சிரிப்புதான். அந்த சிரிப்பு எங்கிருந்து துவங்குகிறது என்று தெரிந்துகொள்ள சார்லிசாப்ளின் அவர்களின் வாழ்க்கையே ஒரு பாடமாக விரிகிறது.