என் நினைவுத்திரையில்
’என் நினைவுத்திரையில்’ என்ற பி.நாகிரெட்டி அவர்களின் சுயசரிதை சாயல் கொண்ட கட்டுரைத்தொகுப்பு நூல். இந்தப் புத்தகத்தில் தமது கிராமத்தை விவரிக்கும் அழகு, சில வார்த்தைகளில் கிராமப் பெரியவர்களின் பண்பு நலன்களை சொல்லிவிடும் நேர்த்தி, இவர் நூற்றது, கதிர் விற்றது, உடுத்தியது, வெங்காய வியாபாரம் செய்த்து, சிறு வயதிலேயே ரங்கூனில் ஒரு ஏழைக் குடும்பத்திற்க்கு உதவியது... நண்பராய், மந்திரியாய், நல்லாசிரியராக இருந்த சக்ரபாணி, மதிப்புடன் பழகிய எம்.ஜி.ஆர்., பிறரைப் பாராட்டும் குணம் கொண்ட எஸ்.எஸ். வாசன் என்று நூல் நெடுக நல்லவர்களையும், நல்லன பற்றியும் குறிப்பிடும் மிக அருமையான புத்தகம் இது.
பதிப்பாசிரியர்: விஸ்வநாத ரெட்டி, தொகுப்பாசிரியர்: வீரபத்திரன், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்