உலகளாவிய தற்காலத் தமிழ்க் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற
லட்சியம் கொண்டிருந்தோம். அது இப்போது சாத்தியம் ஆகியுள்ளது. இந்தத் தொகுப்பில் எழுபத்தியெட்டு கவிஞர்களின் படைப்புகளும்,
அதன் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளன. உலக இலக்கிய வரிசையில் உலாவரும் படைப்புகளாக சமகாலத் தமிழ்க்
கவிதைகள் உயர்ந்து வருகின்றன என்பதை இதை வாசிக்கும்போது பெருமிதத்துடன் உணரமுடியும்.