மாறிவரும் கல்வி - உணவுப் பழக்கங்கள் - கலாசார வித்தியாசங்கள் - நாகரிக மாற்றம்... இவைதாம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவில் பெரும் பள்ளத்தை ஏற்படுத்துகிறது. அந்த பள்ளத்தை இந்த நூல் அதிகமாகவே ஆராய்ந்திருக்கிறது. டாக்டர் உ.கெளதம்தாஸ் பிரச்சனைகளைச் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தீர்வும் சொல்கிறார். பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது மாதிரி இந்த நூலின் வழி நிறைய வழிக்காட்டுதல்களைப் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.