ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்
பெரியார் என்ற கட்டுக்குடங்காத தனிமனித சரிதையும் தமிழக்த்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும். ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மகாத்மா ஜோதிபா புலே போன்ற தலைசிறந்த சமூக சீர்திருத்த முன்னோடிகளின் வரிசையில் வரும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைக் குறித்து விருப்பு வெறுப்பின்றி செய்யப்படும் விஞ்ஞான ஆய்வியல் முறையிலான பகுப்பாய்வுகள் தமிழகத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன. இதற்கு இந்நூல் பெறிதும் உதவும்.