இந்த நூல் 1900 முதல் 2000 வரை தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சிந்தனைகளின் வரலாற்றைப் புதிய முறையில் விவரிக்கிறது. மொழி சார்ந்து உருவான அரசியல், இலக்கியம் போன்றவை எவ்வாறு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தன, தமிழ்த் தலைவர்களாலும் இலக்கியவாதிகளாலும் கட்டமைக்கப்பட்ட தமிழடையாளம் எத்தகையது, எல்லாச் சிந்தனைகளுக்கும் ஈழப்படுகொலையை ஓர் அளவுகோலாகக் கொள்ளலாமா, தமிழக அரசியலின் உள்ளார்ந்த பண்புகளைப் பன்னாட்டுச் சிந்தனைகளோடு எவ்விதம் ஒப்பிடலாம் போன்ற எதிரும் புதிருமாக இந்நூலில் பேசப்படும் பார்வைகள் புதிய வெளிச்சத்தை அளிக்கின்றன. அத்துடன் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் எதிர்கால வாழ்வும் அரசியலும் எப்படி இருக்கும் என அறியத்தக்க முன்குறிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
No product review yet. Be the first to review this product.