கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதான பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவி கொண்டு கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீனமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சனை , போட்டி என்றால் டேவிட் கோலியாத்த்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.டேவிட்டின் வெற்றியை நாம் சாத்தியமற்றது,அதிசயமானது எனக் கூறி வருகிறோம்.