பல்வேறு பேசுபொருள்களைக் கொண்ட புத்தகங்களை ஆழ்ந்து பயின்று,தெளிவான நடையில் அப்புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிவரும் கட்டுரைகளின் மற்றுமொரு தொகுப்பு நூல்.இயக்கங்கள்,வரலாறு,காலனியம் என்னும் பொருண்மைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நூல் கட்டுரைகள் வாசகர்களைப் புதிய அறிவுப் பரப்புகளுக்கு அழைத்துச் செல்லும் தன்மை கொண்டவை;ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை.