சென்னையின் கதை (1921) கிளின் பார்லோ
தமிழில் ப்ரியாராஜ் விலை ரூ. 80
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில்அமைந்துள்ளது