வெண்ணிலாவின் கதைகளில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் மொழி. இதுவரை பெரிய அளவில் இலக்கியங்களில் பதிவாகாத தான் சார்ந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் சார்ந்த பேச்சுத் தமிழில் கதைகளைச் சொல்லியிருக்கிறார். நெசவுத் தொழில் செய்யும் பெண்களைதான் இவரின் கதை களம். குறிப்பாக சிறுமிகள். ஒவ்வொரு கதையின் முடிவுமே மனதைக் கனக்கச் செய்கிறது.