பாரதிதாசன்
பாரதிதாசன் (1891-1964) இளமையில் பக்தி கவிஞராக மலர்ந்து, தேசிய கவிஞராக வளர்ந்து, தன்மாக இயக்கத்தின் புரச்சி கவிஞராக முதிர்ந்து, மனித நேய கவிஞராக நிறையு பெற்றவர். தமிழ் வளர்ச்சி , பெண் விடுதலை, சமுதாய சீர்திருத்தம், மடமை ஒழிப்பு , பொருளாதாரச் சமன்மை ஆகிய குறிக்கோள்களுக்குத் தம் எழுத்துக்களால் ஓயாமல் குரல் கொடுத்தவர். 1929 ஆம் ஆண்டிலேயே கருத்தடை பற்றிய சிந்தனைகளைத் கவிதையில் வடித்தவர். நல்ல குடும்பத்தை பல்கலைக்கழகம் என்றவர். தமிழால் பாரதிதாசனும், பாரதிதாசனால் தமிழும் பெருமை பெற்றது நாடறிந்த உண்மை.