அழிபசி :
எனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன் கோவணம் அவிழ்த்த அப்பனுக்குத்தான் நேரஞ் சரியில்லை கோடாலிக்காம்பு குலத்தையழிக்க ஊன்றக்கொடுத்த கோல் உச்சியைப் பிளக்கிறது முக்கிப் பெற்ற ஆத்தாளுக்கு போகும் தடத்தில் பொய்க்குழி நடக்கும் வழிகளில் நச்சி முள் குளிக்கும் குளத்தில் கூர்வசி உண்கின்ற சோற்றில் நஞ்சு ஒட்டப்பிறந்த தட்டைக் காய்க்கு கண்டுபேச காரியம் – எதிரில் வர அச்சம் சொந்தம் பந்தம் – அந்தி அசல் கப்பலேறிய மானம் தரையிறங்கவில்லை முந்தாநேத்து நடுச்சாமம் இன்னொருத்தரம் என்றதற்கு கொழுநன் காரி உமிழ்ந்த எச்சில் மொகரக்கட்டையில் இன்னும் மணத்துக்கிடக்கிறது எனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன்.