பாரதிக்கும் தொலைந்துபோன வாழ்க்கை ஒன்று உண்டு என்பதையும், அதைப்பற்றிய குறிப்பை, அவனே தன் பாடல்வரிகளுக்குள் புதைத்தும் வைத்துள்ளான்
என்பதையும் எப்படியோ பாரதி கிருஷ்ணகுமார் கண்டுபிடித்துவிட்டார். பாரதியைப் பற்றிய பாரதி கிருஷ்ணகுமாரின் கண்டுப்பிடிப்பு, முற்றிலும் புதிய
கண்டுப்பிடிப்பு....
நான் சமீபத்தில் படித்த நூற்களுள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நூல் இந்நூல் என்பதை ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகச்
சொல்வதில் நான் பெருமையடைகிறேன். இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை, அறிவிலே தெளிவும்,நெஞ்சிலே உறுதியும் அகத்திலே
அன்பின் ஒர் வெள்ளமும் அமையப்பெற்ற பாரதி கிருஷ்ணகுமாருக்கு எனது வாழ்த்துக்கள்.
------ நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்,
சென்னை உயர்நீதிமன்றம்.