மனித உடல் மூலாதாரப் பொருளிலிருந்து உருவாக்கப் பட்டது. அது முதலில் மூலாதாரப் பொருளின் எண்ணங்களாக இருந்த நிச்சயமான செயல்களின் முடிவுப்பலன். மனித உடலை உருவாக்கி, புதுப்பித்து மற்றும் பழுதுபார்க்கும் இயக்கங்கள் உடலின் செயல்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த செயல்கள் இரண்டு வகைப்படும்: தன்னிச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
ஒரு மனிதனின் அனிச்சைச் செயல்கள் அவனது ஆரோக்கியத்தின் மூலாதாரத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் உள்ளவை. அவன் ஒரு நிச்சயமான நம்பிக்கையுள்ள விதத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கும்வரையில், அவன் மூற்றிலும் சரியாக ஆரோக்கியமான வழியில் செயல்படுகின்றான். சாப்பிடுவது திரவம் குடிப்பது, சுவாசிப்பது மற்றும் தூங்குவது வாழ்க்கையின் தன்னிச்சைச் செயல்கள். இவை முழுமையான அல்லது ஒரு பகுதியாக மனிதனின் நினைவுள்ள மனிதன் கட்டுப்பாட்டில் உள்ளவை. அவன் விரும்பினால் அவற்றை ஒரு சரியான அரோக்கியமான வழியில் செயல்பட வைக்காவிடில், ஆரோக்கியமாக நிடித்திருக்க முடியாது.
ஆகவே, ஒரு மனிதன் ஒரு நிச்சயமான நம்பிக்கையுள்ள விதத்தில் சிந்தித்தால் மற்றும் அதற்குப் பொருத்தமான விதத்தில் உணவருந்தினால், திரவம் குடித்தால், சுவாசித்தால் மற்றும் உறங்கினால், அவன் ஆரோக்கியமாக இருப்பான் என்பதைக் காண்கிறோம்.