ஐ.நா. மனித உரிமை அமர்வில் அமெரிக்கா தாக்கல் செய்ய இருந்த தீர்மான நகல், இலங்கை அரசின் இனப்படுகொலையை மூடி மறைப்பதாக இருந்தது. சேனல் 4 தொலைக்காட்சி 12 வயதான பாலசந்திரன் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டது. இந்த நிகழ்வு தமிழக மாணவர்களை கொதித்தெழச் செய்தது. அதைத்தொடர்ந்து, இலங்கை, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுக்கு எதிராக, மாணவர்கள் அறவழியில் நடத்திய போராட்டத்தை அதன் போக்கில் பதிவு செய்திருக்கிறது ‘அறப்போர்’ ஆவணப்படம்!