நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல்,அறிந்து கொள்ளுதல்,உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம்,புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன்.இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களினால் உருவாக்கப்பட்ட நான்,பல நூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த மொழியின் கரையில் அமர்ந்திருக்கிறேன்.கனவு,நனவு,நனவில் கனவு,கனவில் நனவு ஆகிய திசைகளின் வழியே காற்றில் மிதந்து என் மூதாதையரின் பாடலைக் கேட்கப் பாயணிக்கிறேன்.இந்தப் பயணத்தில் உருவாகும் பித்தநிலையையே எழுத்து எனப் பெயரிட்டு சக மனிதனுக்கு வழங்குகிறேன்.
- சாரு நிவேதிதா