அன்புக்குப் பஞ்சமில்லை
இந்தக் கட்டுரைகள் பாவையர் மலர் மாதப் பத்திரிகையில் வெளிவந்தது. என்றால் நம்புவது கடினம்.
ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
குடும்ப்ப் பெண்களின் அகவுகளை, அதற்கேயான சிடுக்குகளை, உறவுகளைக் கையாளும் தன்மையை அது தரும் தைரியத்தை, தன்னம்பிக்கையை வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கின்றன.
வாழ்வு நமக்கெல்லாவற்றையும் கற்றுத்தரும் ஒரு தேர்ந்த ஆசான் எனில், அதை குருபக்தியோடு கற்றுக்கொண்டு, உள்வாங்கி அதை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் வளர்மதி.
ஒரு தேன்கூட்டில் எங்கு தொட்டாலும் வழிகின்ற தேன் சுவைபோல இந்தப் புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிளும் அன்பும், அக்கறையும் மனித வாழ்வு சார்ந்த பரந்த பார்வையும் நிரம்பி வழிகின்றன என்றால் அது மிகையல்ல. வாசித்த பின்பு இதை நீங்களும் முழுமையாக உணரக்கூடும்.