.தமிழ்ப் பெருநிலத்தின் சிறுநிலக் கூறுகளுள் ஒன்றான நெய்தல் புலத்தினுடைய மீன்பிடி மக்களின் வாழ்க்கைச் சித்திரத்தை கடற்காற்றின் குளிர்ச்சியோடு நம் முன் விரிக்கிறது. ‘ஆறுகாட்டுத்துறை’ அவ்வினக்குழு மக்களிடையே தென்படும் நிர்வாக அறத்தையும், சமுத்திரவல்லி எனும் அக்குலமகளின் இல்வாழ்க்கை அறத்தையும் இணையாக விவரிக்கும் இப்புதினம் தமிழ் மண்ணின் மரபு, பண்பாடு குறித்த முக்கியமான தரவுகளையும் வழங்குகிறது. எளிமையான மீனவப் பெண்ணான சமுத்திரவல்லியை அனுபவத்தின் தகிக்கும் வெம்மையாலும் தன் ஆளுமைத் திறனாலும் வாச நெஞ்சில் நீங்கா இடம்பெறச் செய்துவிடுகிறார் சு. தமிழ்ச் செல்வி.