ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து கொண்டும் கலைச்சேவை புரிந்து கொண்டும் வாழ்ந்து வருகிறாள். தானே கட்டியுள்ள கலையரங்கில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையதான புராண நாடகங்களை நடத்தி வருகிறாள்.